RSS

Sunday, August 21, 2011

ரய்யான்

“சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! 


மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.


நோன்பு பற்றி அண்ணலாரின் அமுத மொழிகள் சில


“நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” 
இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.



“ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
 
“ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள்  விலங்கிடப்படுகின்றனர்.”   என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
 



“பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார



“லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” ”என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
 




உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

Tuesday, August 9, 2011

ரமழான் துஆக்கள்

ரமழான் காலத்தில் நாம் அதிகமதிகம் வணக்க வழிப்பாடுகளில் ஈடுபடுவோம் .அல்லாஹ்வின் அருளைப்பெறுவோம். 

முதல் பத்து தினங்களில்
 அல்லாஹ்வின் அருளை،கிருபயை நம்மீது பொழிந்தருள  கீழ் வரும் துஆவை அதிகம் ஓத வேண்டும்.
اللهم ارحمنا  برحمتك يا  أرحم راحمين     
பொருள்:கிருபையாளர்களுக்கெல்லாம் மகா கிருபையாளனே! உன்னுடைய அருளைக் கொண்டு எங்களுக்கு கிருபை செய்வாயாக!

இரண்டாவது பத்தில் 
பாவமன்னிப்பை நாடி இந்த துஆவை அதிகமாக  ஓதவேண்டும்.

 اَلّلهُمَّ اغْفِرْلَناَ   ذُنُوْبَناَ  خَطَايَاناَ  كُلَهَا  يَا رَبَّ  الْعَالَمِيْن


பொருள்:யா அல்லாஹ்! அகிலத்தாரை இரட்சிப்பவனே!எங்களுடைய தவறுகளையும்.எங்கள் அனைத்து பாவங்களையு மன்னித்து  அருள்புரிவாயாக!

இறுதி பத்தில்


நரக வேதனையை விட்டு பாதுகாவல் வேண்டி இந்த துஆவை  அதிகமாக  ஓதவேண்டும்.

اللهم  أعتقنا من النار وأدخلنا  الجنة  يا رب العالمين  


பொருள்;உலகத்தாரை இரட்சிப்பவனே! நரக நெருப்பிலிருந்து எங்களுக்கு விடுதலை அளிப்பாயாக! இன்னும் சுவர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வாயாக!


மேலும் துஆக்களுக்கு இதையும் பாருங்களேன்

உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்

Tuesday, July 26, 2011

தயம்மும் ஓர் விளக்கம்

  1.  உளூவுக்கான மாற்றுப் பரிகாரம்
தொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் அதைக் காரணம் காட்டி தொழாமல் இருக்க முடியாது. மாறாக தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து அதன் பின்பே தொழ வேண்டும்.

சில நேரங்களில் உளூச் செய்வதற்கோ, கடமையான குளிப்பை குளிப்பதற்கோ தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீர் இருந்தும் கடுங்குளிர், நோய் காரணங்களால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீரும் இருந்து பயன்படுத்தக் கூடிய நிலையும் இருந்து உளூச் செய்வதாலோ, கடமையான குளிப்பை குளிப்பதாலோ குடிப்பதற்கு தண்ணீர் இல்லாது போய் விடுமோ என்ற பயம் ஏற்படலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உளூவிற்கும் கடமையான குளிப்பிற்கும் மாற்றுப் பரிகாரமே தயம்மும் என்பதாகும்.

நன்றி

தமிழ்,ஆங்கில இஸ்லாமிய இணையதளங்களுக்கு ஜஜாக்குமுல்லாஹூ கைர்.